எண்ணூறு ஆண்டுகள்: திரு அவையின் வரலாற்றில் ஒரு புனித ஆண்டு
இதழில் அச்சான வடிவில்
உரையாகப் படிக்க
இதே கட்டுரை எளிய உரையாக: கைப்பேசியில் படிக்க, தேட, நகலெடுக்க அல்லது மொழிபெயர்க்க எளிது.
ஒரு மனிதன் இறந்து எண்ணூறு ஆண்டுகள் கழித்தும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் அவரை நினைவுகூர்கிறார்கள் என்றால், அந்த வாழ்க்கை எத்தனை ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும்! 1226ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் பிரான்சிஸ் இறைவனிடம் சென்றார். இரண்டே ஆண்டுகளில், 1228 ஜூலை 16 அன்று, திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். மறுநாளே அவர் பெயரில் பெரும் பசிலிக்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பிரான்சிஸ்கன் குடும்பம் 2023 முதல் 2026 வரை "எட்டாம் நூற்றாண்டு நினைவுகள்" என்ற பெயரில் தொடர் கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது: 2023இல் சபை ஒழுங்குக்கான ஒப்புதலும் கிரெச்சியோ குடிலும்; 2024இல் லா வெர்னாவின் ஐந்து காயங்கள்; 2025இல் படைப்புகளின் பாடல்; 2026இல் அவருடைய இறப்பு — "கடந்து செல்லுதல்". இந்தத் தொடரின் உச்சமே இந்த 800ஆம் நினைவு ஆண்டு.
"கடந்து செல்லுதல்" — ஏன் இறப்பு
அல்ல?
பிரான்சிஸ்கன் மரபில் அவருடைய இறப்பை "த்ரான்சிதுஸ்" (Transitus) — கடந்து செல்லுதல் — என்று அழைக்கிறோம். இயேசு இவ்வுலகிலிருந்து தந்தையிடம் "கடந்து சென்றது" போல (யோவா 13:1), பிரான்சிஸும் மரணத்தின் வழியாக வாழ்வுக்குள் கடந்து சென்றார். எனவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 மாலையில், உலகின் எல்லா பிரான்சிஸ்கன் இல்லங்களிலும் விளக்குகள் ஏற்றி, அவருடைய இறுதி மணிநேரங்களை நினைவுகூரும் வழிபாடு நடைபெறுகிறது. வழிமுறை: பக்கம் 31.
நம் பங்குகளில் எப்படிக்
கொண்டாடலாம்?
முக்கிய நாள்கள்
அக்டோபர் 3 — கடந்து செல்லுதல் (Transitus) நினைவு மாலை
அக்டோபர் 4 — புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாள்
ஜூலை 16, 1228 — புனிதர் பட்டம்
- ஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் மாலை "கடந்து செல்லுதல்" ஜெப நேரம்.
- அமைதிக்கான ஜெபத்தை எல்லாக் குடும்பங்களும் ஒரே நேரத்தில் சொல்லுதல்.
- 800 மரக்கன்றுகள் நடும் பங்கு இயக்கம் — "சகோதரி தாய் பூமிக்காக".
- ஏழைகளுக்கான உணவுப் பகிர்வு — பிரான்சிஸின் "பொவரெல்லோ" மேசை.
1226 – 2026: எட்டு நூற்றாண்டுகளின் சுவடுகள்
"இறைவனின் அருளால் தொடங்கியது, இன்றும் தொடர்கிறது."
1226 — கடந்து செல்லுதல்
அக்டோபர் 3 மாலை, போர்சியுங்குலாவில் பிரான்சிஸ் இறைவனிடம் சென்றார்.
1228 — புனிதர் பட்டம்
ஜூலை 16 அன்று திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி அவரைப் புனிதராக அறிவித்தார்; பசிலிக்கா பணி தொடங்கியது.
1230 — புதிய கல்லறை
அவருடைய உடல் அசிசியின் புதிய பசிலிக்காவுக்கு மாற்றப்பட்டது.
1253 — பசிலிக்கா அர்ச்சிப்பு
திருத்தந்தை நான்காம் இன்னசென்ட் பசிலிக்காவை அர்ச்சித்தார்; ஜியோத்தோ பள்ளியின் சுவரோவியங்கள் பின்னர் அதை அலங்கரித்தன.
1818 — கல்லறை கண்டுபிடிப்பு
நூற்றாண்டுகளாக மறைந்திருந்த அவருடைய கல்லறை அகழ்வாய்வில் மீண்டும் கண்டறியப்பட்டது.
1939 — இத்தாலியின் பாதுகாவலர்
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், சியன்னாவின் கத்தரீனோடு சேர்த்து, அவரை இத்தாலியின் பாதுகாவலராக அறிவித்தார்.
1979 — சூழலியலின் பாதுகாவலர்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவரைச் சூழலியலை வளர்ப்போரின் விண்ணகப் பாதுகாவலராக அறிவித்தார்.
1986 — அசிசி அமைதி நாள்
அக்டோபர் 27 அன்று உலகச் சமயத் தலைவர்கள் அசிசியில் ஒன்றுகூடி அமைதிக்காக ஜெபித்தனர்.
2013 — 'பிரான்சிஸ்' என்ற பெயர்
வரலாற்றில் முதன்முறையாக ஒரு திருத்தந்தை 'பிரான்சிஸ்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.
2015 — லௌ தாத்தோ சி
'படைப்புகளின் பாடலின்' முதல் வரிகளைத் தலைப்பாகக் கொண்ட சுற்றுமடல் வெளியானது.
2020 — ஃப்ராத்தெல்லி துத்தி
'அனைவரும் உடன்பிறப்புகள்' சுற்றுமடல் அக்டோபர் 3 அன்று அசிசியில் கையொப்பமிடப்பட்டது.
2026 — 800ஆம் நினைவு
எட்டாம் நூற்றாண்டு நினைவுகளின் நிறைவு — 'கடந்து செல்லுதலின்' 800ஆம் ஆண்டு.
உங்களுக்குத் தெரியுமா?
பிரான்சிஸ் ஒருபோதும் குருவாகத் திருநிலைப்படுத்தப்படவில்லை. தாழ்ச்சியினால் திருத்தொண்டர் (deacon) நிலையிலேயே இருந்தார்.
உலகம் முழுவதும் பிரான்சிஸ்கன் குடும்பம் — சகோதரர்கள், சகோதரிகள், பொதுநிலைப் பிரான்சிஸ்கர்கள் — லட்சக்கணக்கானோரைக் கொண்டது.