படைப்பும் அமைதியும்

சகோதரத்துவம் எல்லா படைப்புகளுடனும்

பிரான்சிஸ்கனின் சுற்றுச்சூழல் செய்தி

இதழில் அச்சான வடிவில்

பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்… · இதழ் 1 · பக்கங்கள் 23–25

இதழின் பக்கம் 23: சகோதரத்துவம் எல்லா படைப்புகளுடனும்
பக்கம் 23
இதழின் பக்கம் 24: சகோதரத்துவம் எல்லா படைப்புகளுடனும்
பக்கம் 24
இதழின் பக்கம் 25: சகோதரத்துவம் எல்லா படைப்புகளுடனும்
பக்கம் 25

உரையாகப் படிக்க

இதே கட்டுரை எளிய உரையாக: கைப்பேசியில் படிக்க, தேட, நகலெடுக்க அல்லது மொழிபெயர்க்க எளிது.

"எல்லா படைப்புகளும் நம் சகோதரரும் சகோதரிகளும்." இந்த இதழின் பின்னட்டையில் நீங்கள் வாசிக்கும் இந்த வரி, பிரான்சிஸின் ஆன்மீகத்தின் சுருக்கம். அவருக்கு இயற்கை என்பது பயன்படுத்தித் தூக்கியெறியும் "வளம்" அல்ல;

ஒரே தந்தையின் பிள்ளைகளாகிய குடும்பம். சூரியன் அண்ணன், நிலா தங்கை, காற்று சகோதரன், நீர் சகோதரி, பூமி தாயும் சகோதரியும்.

காலநிலை மாற்றம், வெள்ளம், வறட்சி, பிளாஸ்டிக் மாசு — இன்று தமிழ்நாட்டின் கடற்கரைகளும் ஆறுகளும் விவசாய நிலங்களும் இவற்றின் வலியைச் சுமக்கின்றன. "பூமியின் அழுகையும் ஏழைகளின் அழுகையும்" ஒன்றே என்று 'லௌ

தாத்தோ சி' சுற்றுமடல் நினைவூட்டுகிறது. பிரான்சிஸின் பார்வை இன்று ஒரு தேர்வு அல்ல; தேவை.

"என் ஆண்டவரே, எங்கள் சகோதரியும் தாயுமான பூமிக்காக நீர் புகழப்படுவீராக."

— படைப்புகளின் பாடல்

முழுப் பாடல்

படைப்புகளின் பாடல்

அண்ணன் சூரியனின் பாடல் (Canticum Fratris Solis) • புனித பிரான்சிஸ் அசிசி, 1225 • தமிழாக்கம்:

ஆசிரியர் குழு

  1. உன்னதரே, எல்லாம் வல்லவரே, நல்ல ஆண்டவரே, புகழும் மகிமையும் மாண்பும் எல்லா ஆசீர்வாதமும் உமக்கே உரியன. உன்னதரே, இவை உமக்கு மட்டுமே உரியன; உம் பெயரைச் சொல்லத் தகுதியான மனிதர் எவருமில்லை.
  2. என் ஆண்டவரே, உம் படைப்புகள் அனைத்தோடும் நீர் புகழப்படுவீராக; சிறப்பாக, அண்ணன் சூரியனோடு — அவனே பகல்; அவன் வழியாக எங்களுக்கு ஒளி தருகிறீர். அவன் அழகானவன், பேரொளியோடு சுடர்விடுபவன்; உன்னதரே, உம்மையே அவன் குறிக்கிறான்.
  3. என் ஆண்டவரே, தங்கை நிலவுக்காகவும் விண்மீன்களுக்காகவும் நீர் புகழப்படுவீராக; வானில் அவற்றைத் தெளிவாகவும் விலைமதிப்புடனும் அழகாகவும் உருவாக்கினீர்.
  4. என் ஆண்டவரே, சகோதரன் காற்றுக்காகவும், மேகத்துக்காகவும், அமைதியான வானுக்காகவும், எல்லாக் காலநிலைகளுக்காகவும் நீர் புகழப்படுவீராக; அவற்றின் வழியாக உம் படைப்புகளைப் பேணுகிறீர்.
  5. என் ஆண்டவரே, சகோதரி நீருக்காக நீர் புகழப்படுவீராக; அவள் மிகப் பயனுள்ளவள், தாழ்ச்சியானவள், விலைமதிப்பற்றவள், தூய்மையானவள்.
  6. என் ஆண்டவரே, சகோதரன் நெருப்புக்காக நீர் புகழப்படுவீராக; அவன் வழியாக இரவை ஒளிர்விக்கிறீர். அவன் அழகானவன், மகிழ்ச்சியானவன், வலிமையானவன், ஆற்றல் மிக்கவன்.
  7. என் ஆண்டவரே, எங்கள் சகோதரியும் தாயுமான பூமிக்காக நீர் புகழப்படுவீராக; அவள் எங்களைத் தாங்கி ஆள்கிறாள்; பல்வேறு கனிகளையும், வண்ண மலர்களையும், புற்களையும் விளைவிக்கிறாள்.
  8. என் ஆண்டவரே, உம் அன்புக்காக மன்னிப்பவர்களுக்காகவும், நோயையும் துன்பத்தையும் தாங்குபவர்களுக்காகவும் நீர் புகழப்படுவீராக. அமைதியில் தாங்குவோர் பேறுபெற்றோர்; உன்னதரே, அவர்கள் உம்மால் முடிசூட்டப்படுவார்கள்.
  9. என் ஆண்டவரே, எங்கள் சகோதரி உடல் மரணத்துக்காக நீர் புகழப்படுவீராக; வாழும் எந்த மனிதரும் அவளிடமிருந்து தப்ப முடியாது… உம் திருவுளத்தில் அவள் காணும் மனிதர் பேறுபெற்றோர்; இரண்டாம் மரணம் அவர்களுக்குத் தீங்கிழைக்காது.
  10. என் ஆண்டவரைப் புகழுங்கள், ஆசீர்வதியுங்கள்; அவருக்கு நன்றி செலுத்துங்கள்; மிகுந்த தாழ்ச்சியோடு அவருக்குப் பணிவிடை செய்யுங்கள்.
சகோதரத்துவம் எல்லா படைப்புகளுடனும்

பாடலின் பின்னணி

இத்தாலிய மொழியின் உம்பிரியா வட்டார வழக்கில் எழுதப்பட்ட இந்தப் பாடல், இத்தாலிய இலக்கியத்தின் தொடக்கக் காலப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மன்னிப்பு பற்றிய பகுதியை அசிசி ஆயருக்கும் நகர ஆட்சியாளருக்கும் இடையிலான சண்டையைத் தீர்க்கவும், மரணம் பற்றிய பகுதியை இறப்புக்குச் சற்று முன்னும் பிரான்சிஸ் சேர்த்தார்.

லௌ தாத்தோ சி: வீட்டிலிருந்து தொடங்கும் மாற்றம்

பிரான்சிஸின் சூழலியல் பார்வை அறிவியல் கருத்தரங்குகளில் பிறந்தது அல்ல; வியப்பிலும் நன்றியிலும் பிறந்தது. ஒரு பூவைக் கண்டு நின்று புகழ்ந்தவர், அதைக் காலால் மிதிக்க மாட்டார்.

2015இல் வெளியான 'லௌ

தாத்தோ சி'

(இறைவா, உமக்கே புகழ்) சுற்றுமடல் இதையே சொல்கிறது: இயற்கையை வியப்போடு பார்க்காதவர், அதை நுகர்வோராகவும் சுரண்டுவோராகவும் மட்டுமே பார்ப்பார். பிரான்சிஸைப் போல எல்லாவற்றோடும் உறவை உணர்ந்தால், எளிமையும் பராமரிப்பும் இயல்பாக வரும்.

இந்தச் சுற்றுமடல் "ஒருங்கிணைந்த சூழலியல்" என்ற கருத்தை முன்வைக்கிறது: சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் சமூக நீதியும் பிரிக்க முடியாதவை. கடல் மட்டம் உயரும்போது முதலில் மூழ்குவது மீனவர் குடிசைகள்; வறட்சி வரும்போது முதலில் வாடுவது சிறு விவசாயி. ஆகவே படைப்பைப் பாதுகாப்பது ஏழைகளை நேசிப்பதன் ஒரு வடிவம்.

தாத்தோ சி' சுற்றுமடலின் மையக் கருத்து

குடும்பத்துக்கான 10 பச்சைப் படிகள்

  • துணிப்பை, எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் — ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு விடை
  • மழைநீர் சேகரிப்பு; குழாயைத் திறந்து வைக்காமல் பல் துலக்குதல்
  • பயன்படுத்தாத விளக்குகள், மின்விசிறிகளை அணைத்தல்
  • சமையலறைக் கழிவிலிருந்து உரம் தயாரித்தல்
  • மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம்
  • உணவை வீணாக்காமை — மீதியைப் பகிர்தல்
  • குறுகிய தூரத்துக்கு நடை அல்லது மிதிவண்டி
  • பழைய உடைகள், பொருள்களைத் தேவையானோருக்குக் கொடுத்தல்
  • பிறந்தநாள்களில் ஒரு மரக்கன்று நடுதல்
  • உணவுக்கு முன் படைப்புக்காக நன்றி ஜெபம்

பங்குக்கான பசுமைத் திட்டம்

  • ஆலய வளாகத்தில் "பிரான்சிஸ் தோட்டம்" — காட்டுப் பூக்களுக்கும் பறவைகளுக்கும் இடம்
  • திருவிழாக்களில் பிளாஸ்டிக் தோரணங்கள், தட்டுகளுக்குத் தடை; வாழை இலை, பனை ஓலை
  • செப்டம்பர் 1 – அக்டோபர் 4: "படைப்பின் காலம்" கொண்டாட்டம்
  • ஆலயக் கூரையில் சூரிய மின் தகடுகள் — "அண்ணன் சூரியனின்" கொடை
சகோதரி நீர் — தாழ்ச்சியானவள், விலைமதிப்பற்றவள்
சகோதரி நீர் — தாழ்ச்சியானவள், விலைமதிப்பற்றவள்

"பூமியின் அழுகையையும் ஏழைகளின் அழுகையையும் ஒருசேரக் கேட்போம்."

— 'லௌ