இளைஞர், குடும்பம் & சமூகம்

குட்டி பிரான்சிஸ்களே, வாருங்கள்!

இதழில் அச்சான வடிவில்

பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்… · இதழ் 1 · பக்கம் 30

இதழின் பக்கம் 30: குட்டி பிரான்சிஸ்களே, வாருங்கள்!
பக்கம் 30

உரையாகப் படிக்க

இதே கட்டுரை எளிய உரையாக: கைப்பேசியில் படிக்க, தேட, நகலெடுக்க அல்லது மொழிபெயர்க்க எளிது.

வாசியுங்கள் • விடை கண்டுபிடியுங்கள் • வண்ணம் தீட்டுங்கள்

வினாடி வினா

  1. பிரான்சிஸ் பிறந்த ஊர் எது?
  2. சான் தமியானோவில் சிலுவை

சொன்னது என்ன?

  1. பிரான்சிஸ் முதல் குடிலை

அமைத்த இடம்?

  1. பிரான்சிஸ் ஓநாயோடு சமாதானம்

செய்த ஊர்?

  1. பிரான்சிஸின் திருநாள் எப்போது?
  2. பிரான்சிஸோடு இணைந்து சபை

தொடங்கிய புனிதை யார்?

  1. பிரான்சிஸ் ஐந்து காயங்கள் பெற்ற

மலை?

  1. 'டாவ்' சிலுவை எந்த எழுத்தின்

வடிவம்?

விடைகள்: 1. அசிசி • 2. என் இல்லத்தைச் சீர்செய் • 3. கிரெச்சியோ • 4. கூப்பியோ • 5. அக்டோபர் 4 • 6. கிளாரா • 7. லா வெர்னா • 8. கிரேக்க 'T'

பிரான்சிஸும் அவர் நண்பர்களும் — இந்தப் படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன? எண்ணிப் பாருங்கள்!
பிரான்சிஸும் அவர் நண்பர்களும் — இந்தப் படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன? எண்ணிப் பாருங்கள்!

இந்த வாரச் சவால்

  • பறவைகளுக்காக வீட்டு மாடியில் ஒரு கிண்ணம் தண்ணீர் வையுங்கள்.
  • அம்மா அப்பாவுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதுங்கள்.
  • வகுப்பில் தனியாக இருக்கும் ஒரு நண்பனோடு/நண்பியோடு விளையாடுங்கள்.

நீங்களே வரையுங்கள்: என் "டாவ்" சிலுவை

ஒரு அட்டையில் இந்த "T" வடிவச் சிலுவையை வரைந்து, வெட்டி, அதில் "சமாதானமும் நன்மையும்" என்று எழுதுங்கள். கயிற்றில் கோர்த்துக் கழுத்தில் அணியுங்கள் அல்லது உங்கள் படிப்பு மேசையில் வையுங்கள். உங்கள் ஓவியங்களை இதழுக்கு அனுப்புங்கள் — அடுத்த இதழில் சிறந்தவை வெளியிடப்படும்!